உள்ளூர் செய்திகள்
கடற்கரையில் நடந்த பேஷன் ஷோவில் அழகிகள் வண்ண உடைகள் அணிந்து ஒய்யார நடையில் வந்த காட்சி.

கடற்கரை திருவிழாவில் நாட்டுப்புற இசை-நடனம்

Published On 2022-04-15 05:35 GMT   |   Update On 2022-04-15 05:35 GMT
கடற்கரை திருவிழாவில் நாட்டுப்புற இசை-நடனம் நடைபெறுகிறது.
கடற்கரை திருவிழாவில் நாட்டுப்புற இசை-நடனம் நடைபெறுகிறது.

புதுச்சேரி;

புதுவையில் முதன் முதலாக சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை திருவிழா நடைபெறுகிறது.

கடந்த 13-ந் தேதி தொடங்கிய விழா 16-ந் தேதி வரை நடக்கிறது. இதற்காக பாண்டி மெரீனா கடற்கரை, புதுக்குப்பம் மணற்குன்று, வீராம்பட்டினம் ரூபி கடற்கரை, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை ஆகிய பகுதிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சி-களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  (வெள்ளிக்கிழமை) கடற்கரை சாலை லேகபே, குபேர் அவென்யூவில் மாலை 5 மணிக்கு மூங்கில் இசைக்கருவி இசை, நாட்டுப்புற இசை, நடனமும், இரவு 7 மணிக்கு வான் விளக்கு காட்சியும் நடக்கிறது.

நேற்று மெரீனா கடற்கரையில் பட்டம் விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுவை காந்தி திடல் கடற்கரையில் பிரபல  பின்னணி நாட்டுப்புற பாடகி இசைவாணியின் இசை நிகழ்ச்சியும், தொடர்ந்து பேஷன் ஷோ நிகழ்ச்சியும் நடைபெற்றது. சுமார் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மற்றும் அழகிகள் கலந்து கொண்டு வண்ண ஆடைகள் அணிந்து ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை அசத்தினர். 

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் பரிசுகள் வழங்கப்-பட்டது. மெரினா கடற்கரையில் விஜய் டிவியின் புகழ் சூப்பர் சிங்கர் பின்னணி பாடகர்களான, ராஜகணபதி, அனு, ஷாம் விஷால், மற்றும் அசார் ஆகியோரின் பாடல் மற்றும் காமெடி நிகழ்ச்சிகள் நடந்தது. இதை ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கண்டு ரசித்தனர்.
Tags:    

Similar News