செய்திகள்
பிரகாஷ் ஜவடேகர்

புல்வாமா விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்- பிரகாஷ் ஜவடேகர்

Published On 2020-10-30 10:41 GMT   |   Update On 2020-10-30 10:41 GMT
பாகிஸ்தான் மந்திரி புல்வாமா தாக்குதல் வெற்றி எனக் கூறிய நிலையில், காங்கிரஸ் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்ர் வலியுறுத்தியுள்ளார்.
புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அரசின் மிகப்பெரிய சாதனை என பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி பவாத் சௌத்ரி தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக நேற்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் சௌத்ரி தெரிவித்ததாவது:-

நாம் இந்தியாவை அந்த சொந்த மண்ணில் தாக்கியுள்ளோம். புல்வாமாவில் நமது வெற்றி என்பது பிரதமர் இம்ரான்கானின் தலைமையிலான பாகிஸ்தான் அரசின் மக்களின் வெற்றியாகும். நாம் அனைவரும் இந்த வெற்றியில் பங்குபெற்றவர்கள். புல்வாமாவில் நடந்ததை நாம் பெருமையாக கொள்ளவேண்டும். ஆனால், நீங்கள் (பாக்.எதிர்க்கட்சி தலைவரை நோக்கி) அரசாங்கத்தை குறைத்து மதிப்பீடு செயவது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

இவ்வாறு பவாத் சௌத்ரி தெரிவித்திருந்தார்.

புல்வாமா தாக்குதல் பாதுகாப்பு குறைபாடு. இந்த தாக்குதலில் இருந்து அதிக அளவில் நன்மை அடைவது யார்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது கடும் குற்றாச்சாட்டு வைத்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் மந்திரி பெருமையாக பேசிய நிலையில் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் வடேகர் வலியுறுத்தியுள்ளார்.

பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டரில் ‘‘புல்வாமா தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது காங்கிரஸ், மற்றவர்கள் சதி குறித்து பேசி வந்த நிலையில், அவர்கள் கட்டாயம் மன்னிப்பு கேட்டக வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News