செய்திகள்
ராகுல் காந்தி

பெட்ரோல், டீசல் விலை உயர்வு - மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2021-06-18 20:11 GMT   |   Update On 2021-06-18 20:30 GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
புதுடெல்லி:

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்திருக்கும் நிலையில், டீசலும் சில இடங்களில் ரூ.100-ஐ தொட்டிருக்கிறது.

நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை முறையே ரூ.108.07, ரூ.100.82 என விற்கப்படுகிறது.

இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டுகளை வீசி வருகிறார்.

இந்நிலையில், ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ‘பெட்ரோல், டீசல் விலை உயர்வு தலைப்பு செய்தி ஆகாத அளவுக்கு மோடி தலைமையிலான அரசின் வளர்ச்சி உச்சத்தை எட்டியிருக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News