உலகம்
இந்தியா வாங்க இருக்கும் எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு வாகனம்

இந்த சூழ்நிலையில் இந்தியா- ரஷியா ஒப்பந்தம் முக்கியமானதாக பார்க்கப்படும்: அமெரிக்கா

Published On 2022-01-28 11:34 GMT   |   Update On 2022-01-28 13:33 GMT
உக்ரைன் மீது ரஷியா எப்போது வேண்டுமென்றாலும் போர் தொடுக்கலாம் என்ற நிலையில், இந்தியா ஆயுதம் வாங்குவது முக்கியமானதாக பார்க்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியா அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா இடையிலான உறவு  சுமூகமான நிலையில் இல்லை. எல்லையில் அடிக்கடி ஊடுருவல் போன்ற சம்பவங்களால் பதற்றமான நிலை உருவாகி வருகிறது. இதனால் இந்தியா எல்லையில் படைகளை குவித்து வருகிறது.

எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. சுய சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே ராணுவத்திற்கான தளவாடங்களை இந்தியா தயாரித்து வருகிறது. இருந்தாலும் அதி நவீன போர் விமானங்கள் போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.

பிரான்சில் இருந்து ரபேல் போர் விமானங்களை இந்தியா இறக்குமதி செய்து விமானப்படையில் இணைத்துள்ளது. ரஷியாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு இந்தியா இறக்குமதி செய்ய இருக்கிறது. கோடிக்கணக்கில் இதற்காக இந்தியா செலவழிக்க இருக்கிறது.

இந்தியா ரஷியாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்க இருப்பது குறித்து அமெரிக்கா ஏற்கனவே அதிருப்தி தெரிவித்து வருகிறது. ஆனால், தேசிய பாதுகாப்பு மற்றும் தேச நலனுக்கான நாங்கள் ரஷியாவிடம் இருந்து ஏவுகணை கொள்முதல் செய்ய இருக்கிறோம் என இந்தியா திட்டவட்டாக தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்கா இந்தியா கொள்முதல் செய்வது குறித்த விவகாரத்தை விட்டுவிட்டது.

இந்த நிலையில்தான் உக்ரைன்- ரஷியா இடையோ போர் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரைன் எல்லையில் ஒரு லட்சம் வீரர்களை குவித்துள்ளது ரஷியா. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. மேலும், புதின் மீது பொருளாதாரத்தடை விதிக்கப்படும் என ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்தியா கோடிக்கணக்கான பணத்தை ரஷியாவுக்கு கொடுக்கும் நிலை குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. தொடர்ந்து ரஷியாவிடம் ஆயுதங்கள் கொள்முதல் செய்யும் புதிய ஒப்பந்தத்தை தவிர்க்க வேண்டும் என அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இந்தியா எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு வாங்கும் விசயத்தில் தொடர்ந்து நாங்கள் கவலை தெரிவித்து வருகிறோம். எங்களுடைய கவலையில் மாற்றம் ஏதும் இல்லை. ரஷியா அதனுடையாக பகுதியில் மட்டும் விளையாடி கொண்டிருக்கவில்லை. அதையும் தாண்டி சாத்தியக்கூறு உள்ளது. ரஷியாவின் ஸ்திரமின்மையில் இது முக்கிய இடம் பெறும் என நான் நினைக்கிறேன் என்று அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.



CAATSA தடை என வரும்போது, இந்த பரிவர்த்தனை தொடர்பாக நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை, ஆனால் CAATSA இன் கீழ் இந்த குறிப்பிட்ட பரிவர்த்தனைக்கான தடைகள் ஏற்படும் அபாயம் இருப்பதால், இந்திய அரசாங்கத்துடன் நாங்கள் தொடர்ந்து விவாதித்து வருகிறோம்’’ என்றார்.

ஜோ பைடன் அரசு தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த நிலையில், இந்தியா எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு கொள்முதல் செய்யும் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. அந்த முடிவில் எந்த மாற்றமும் செய்ய இந்தியா மறுத்து விட்டது.
Tags:    

Similar News