செய்திகள்
கோப்புபடம்

மாணவர்கள் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டக் கூடாது - நீதிபதி அறிவுரை

Published On 2021-10-24 04:13 GMT   |   Update On 2021-10-24 04:13 GMT
மாணவிகள், சிறுமிகள் பாதிப்பதை தடுக்கும் வகையில், ‘போக்சோ’ சட்டம் நடைமுறையில் உள்ளது.
உடுமலை:

தேசிய சட்டபணிகள் குழு 25-ம் ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு உடுமலை சட்ட பணிகள் குழு சார்பில் பல்வேறு பகுதிகளில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்து வருகிறது. உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மடத்துக்குளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

இதில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாக்கியராஜ் பேசியதாவது:

பள்ளி மாணவர்கள் சட்டம் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். சட்ட விதிகளை பின்பற்றி நடப்பதோடு 18 வயதிக்குட்பட்ட மாணவர்கள் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டக்கூடாது. உரிமம் பெற்றவர்கள், போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். 

மாணவிகள், சிறுமிகள் பாதிப்பதை தடுக்கும் வகையில், ‘போக்சோ’ சட்டம் நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தின் கீழ் கடும் தண்டனை வழங்கப்படும். இது குறித்தும், சட்ட வழிமுறைகள் குறித்து மாணவர்கள் அறிந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இதில் வக்கீல் சத்தியவாணி மற்றும் வட்ட சட்ட பணிகள் குழுவினர், மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News