உள்ளூர் செய்திகள்
தாலிக்கு தங்கம் வழங்கப்பட்ட காட்சி.

தென்காசியில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி

Published On 2022-01-15 07:47 GMT   |   Update On 2022-01-15 07:47 GMT
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமையில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி:

தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் மகளிருக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், அதற்கு கீழ் கல்வித் தகுதி பெற்ற பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் தமிழக முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமையில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், ராஜா, சதன் திருமலை குமார், தென்காசி தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாவட்டத்தில் பட்டப் படிப்பு முடித்த 1,194 பெண் களுக்கு தலா 8 கிராம் தங்க நாணயத்துடன் ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் 10-ம் வகுப்பு படித்த 999 பெண்களுக்கு தலா 8 கிராம் தங்க நாணயத்துடன் ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News