செய்திகள்
பொது கிணறு.

தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பொது கிணறுகள் அமைக்க சிறப்பு அனுமதி

Published On 2021-09-12 08:39 GMT   |   Update On 2021-09-12 08:39 GMT
கதிர் அடிக்கும் தளம், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம் அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் குளம், குட்டை தூர்வாருதல், மண் சாலை சீரமைப்பு பணிகளுடன், சிறிய வேளாண் பணிகளும் இணைக்கப்பட்டன. மத்திய அரசு  அதிக நிதி ஒதுக்குவதால் ஊராட்சியில், கான்கிரீட் தளம், 'பேவர் பிளாக்' தளம், கான்கிரீட் தடுப்பணை, தனிநபர் மற்றும் சமுதாய உறிஞ்சு குழிகள் அமைத்தல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பணிகள் சேர்க்கப்பட்டன.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூறுகையில், பொது கிணறு மற்றும் தனிநபர் கிணறு அமைக்கவும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனிநபர் கிணறு அமைக்க ரூ. 7 லட்சம்  வரையிலும், பொது கிணறுக்கு ரூ.12 லட்சம்  வரையிலும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கதிர் அடிக்கும் தளம், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம் அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றனர்.
Tags:    

Similar News