தொழில்நுட்பம்
சாம்சங் ஸ்மார்ட்போன்

இணையத்தில் லீக் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்

Published On 2020-12-12 04:15 GMT   |   Update On 2020-12-12 04:15 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இம்முறை இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பிரவுசர் பென்ச்மார்க் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய தகவல்களின் படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் SM-A526B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. பெரும்பாலும் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ52 ஜி என்றே அழைக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இதே மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருந்தது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 6 ஜிபி ரேம், பன்ச் ஹோல் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இத்துடன் புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் சென்சார், டெப்த் சென்சார் மற்றும் மேக்ரோ சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்புறம் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.  
Tags:    

Similar News