லைஃப்ஸ்டைல்
கவர்ச்சியான கருமை நிறத்தில் உள்ளவர்களுக்கு ஏற்ற லிப்ஸ்டிக்

கவர்ச்சியான கருமை நிறத்தில் உள்ளவர்களுக்கு ஏற்ற லிப்ஸ்டிக்

Published On 2020-01-31 03:52 GMT   |   Update On 2020-01-31 03:52 GMT
கருமை நிறத்திற்கு ஏற்ற மேக்கப் பயன்படுத்துவதால் அவர்களின் அழகும் மேலும் கூடுகிறது. கவர்ச்சியான கருமை நிறத்தில் உள்ளவர்கள் பயன்படுத்த வேண்டிய லிப்ஸ்டிக் நிறங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.
இன்றைய நாட்களில் கருப்பு என்பது கவர்ச்சி, காந்தம், கலை என்று அர்த்தம் கொள்ளப்படுகிறது. கருப்பாக இருப்பவர்கள் பலர் இன்று திரை உலகில் மின்னும் நட்சத்திர நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். கருமை நிறத்திற்கு ஏற்ற மேக்கப் பயன்படுத்துவதால் அவர்களின் அழகும் மேலும் கூடுகிறது. குறிப்பாக உதடுகளுக்கு பயன்படுத்தும் லிப்ஸ்டிக் ஒருவரின் முக அழகை அதிகரிக்கும். அதே சமயம் முகத்திற்கு பொருந்தாத நிறத்தைக் கொண்ட லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் முக அழகே கெட்டு விடும். கவர்ச்சியான கருமை நிறத்தில் உள்ளவர்கள் பயன்படுத்த வேண்டிய லிப்ஸ்டிக் நிறங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.

கருமையான சருமம் உள்ளவர்களுக்காகவே சில லிப்ஸ்டிக் நிறங்கள் உள்ளது. இதனை விடுத்து, சில நேரம் கருமை நிறமுள்ள பெண்கள் தவறான தேர்வை செய்து, அழகை வெளிக்காட்ட முடியால் அவ நம்பிக்கை கொள்கின்றனர். பொதுவாக பிரவுன் சார்ந்த நிறங்கள் உங்களுக்கு ஏற்றவையாக இருக்கும். இதைத் தவிர வேறு சில நிறங்களும் உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கலாம். இங்கே குறிபிட்டுள்ள சில நிறங்களை முயற்சி செய்து பாருங்கள்.

கருமை நிற பெண்களுக்கு காப்பர் பிரவுன் மிகவும் கவர்ச்சியாக இருக்கும். காப்பர் ப்ரௌனின் பல ஷேடுகள் இந்த நிறத்துடன் ஒத்து போகும். எல்லா வித ஆடைகளுக்கும் எல்லா இடத்திற்கும் இந்த நிறம் பொருந்தும்.

உலகளவில் அனைவருக்கும் பிடித்த நிறம் சிவப்பு. கருமை நிற பெண்களை அழகாக, ஈர்க்க வைக்கும் ஹாட்டாக காட்டும் நிறமாக இந்த நிறம் உள்ளது. சிவப்பு நிறத்திற்கு ஏற்ற லிப் லைனரை பயன்படுத்தி, உள்ளுக்குள் சிவப்பு ஷேடை பயன்படுத்துங்கள். இதற்கு மேல் பளபளப்பை கொடுக்கும் விதமாக க்ளிட்டரை சேர்க்கலாம். உங்கள் கருமையான சருமத்திற்கு சிவப்பு நிறம் மேலும் அழகைக் கொடுக்கும். மற்ற எல்லாவற்றையும் மறந்து உங்கள் அழகைப் பற்றி மட்டும் நினைத்துக் கொள்ளுங்கள்.
Tags:    

Similar News