தொழில்நுட்பம்
லெனோவோ லீஜியன்

முப்பது நிமிடங்களில் முழு சார்ஜ் ஆகும் லெனோவோ ஸ்மார்ட்போன்

Published On 2020-07-21 06:44 GMT   |   Update On 2020-07-21 06:44 GMT
லெனோவோ நிறுவனத்தின் புதிய லீஜியன் ஸ்மார்ட்போன் முப்பது நிமிடங்களில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் என தகவல் வெளியாகி உள்ளது.


லெனோவோ லீஜியன் கேமிங் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் அடிக்கடி இணையத்தில் லீக் ஆகி வருகிறது. லெனோவோ லீஜியன் ஸ்மார்ட்போனுடன் அசுஸ் ரோக் போன் 3 மாடலும் அறிமுகமாக இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களுக்கும் சந்தையில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் லெனோவோ லீஜியன் ஸ்மார்ட்போனில் 90 வாட் ட்வின் டர்போ சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் பேட்டரியை முப்பது நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும் என தெரிகிறது.



புதிய லெனோவோ லீஜியன் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட இருக்கிறது. அந்த வகையில் முப்பது நிமிடங்களில் முழு சார்ஜ் ஆவது சிறப்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. லெனோவோ லீஜியன் பேட்டரி இருபாகங்களாக பிரிக்கப்பட்டு, இரண்டும் ஒரே சமயத்தில் சார்ஜ் ஆகும் திறன் வழங்கப்பட்டு உள்ளது.

புதிய 90 வாட் சார்ஜிங் தொழில்நுட்பம் மூலம் ஸ்மார்ட்போன் பேட்டரிக்கு சீராக மின்திறன் செல்கிறதா என்பதை உறுதி செய்ய 16 பாதுகாப்பு சோதனைகள் பின்பற்றப்பட்டு இருப்பதாக லெனோவோ டீசரில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு வெளியான அசுஸ் ரோக் போன் 2 மாடலில் உள்ளதை போன்று புதிய ஸ்மார்ட்போனிலும் இரண்டு யுஎஸ்பி டைப் சி போர்ட்கள் வழங்கப்படுகின்றன.
Tags:    

Similar News