இந்தியா
பள்ளத்தில் கவிழ்ந்த லாரியை மீட்கும் வனத்துறையினர்

இடுக்கி அருகே நள்ளிரவில் 300 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் - கிளீனர் பலி

Published On 2022-01-25 04:55 GMT   |   Update On 2022-01-25 04:55 GMT
இடுக்கி அருகே நள்ளிரவில் 300 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர், கிளீனர் பலியாகினர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:

கேரளாவின் அடி மாலியில் இருந்து கோதமங்கலம் பகுதிக்கு சரக்கு ஏற்றி கொண்டு ஒரு டாரஸ் லாரி சென்றது. லாரியை டிரைவர் சிஜி ஓட்டினார். நேற்று இரவு லாரி இடுக்கி மலை பாதையில் சென்றது. அப்போது திடீரென லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

இதில் லாரி 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. லாரி டிரைவர் சிஜி மற்றும் கிளீனர் சந்தோஷ் இருவரும் லாரிக்கு அடியில் சிக்கி கொண்டனர்.

லாரி பள்ளத்தில் கவிழ்ந்தபோது எழுந்த சத்தத்தை கேட்டு அருகில் உள்ள கிராம மக்கள் ஓடி வந்தனர். அவர்கள் சம்பவம் பற்றி போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

அங்கிருந்து ஊழியர்கள் விரைந்து வந்து லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை லாரி டிரைவர் சிஜி மற்றும் கிளீனர் சந்தோஷ் இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Tags:    

Similar News