தொழில்நுட்பம்
நோக்கியா சி3

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2020-08-05 07:13 GMT   |   Update On 2020-08-05 07:13 GMT
ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட புதிய நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா சி3 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் சீன சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் 3040 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. இத்துடன் எக்ஸ்பிரஸ் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதை க்ளிக் செய்து கூகுள் அசிஸ்டண்ட் அல்லது இதர செயலிகளை இயக்க முடியும்.



நோக்கியா சி3 சிறப்பம்சங்கள்

- 5.99 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்டி+ 18:9 டிஸ்ப்ளே
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
- ஐஎம்ஜி8322 ஜிபியு
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 8 எம்பி பிரைமரி கேமரா, f/2.0, எல்இடி ஃபிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
- மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
- 3040 எம்ஏஹெச் பேட்டரி 

நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் நார்டிக் புளூ மற்றும் கோல்டு சேண்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 100 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 7530 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News