செய்திகள்
சோமாலியாவில் மழைவெள்ளம் (பழைய படம்)

சோமாலியாவில் கனமழை - 25 பேர் உயிரிழப்பு

Published On 2019-11-08 05:57 GMT   |   Update On 2019-11-08 05:57 GMT
சோமாலியா நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 25 பேர் உயிரிழந்தனர். 47 பேர் காயமடைந்தனர், என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மொகதிஷு: 

சோமாலியா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை வெள்ளம் காரணமாக பல்வேறு இடங்களில் மக்களின்  இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என சோமாலியா நீர் மற்றும் நில தகவல் மேலாண்மை  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   

கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து இதுவரை 2,70,000 மக்கள்  பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவசர நிலையில் உயிர்காக்கும் அறிவுரைகள் சோமாலியா அரசிற்கு  வழங்கப்படுகிறது. மழைவெள்ளம் காரணமாக பொதுமக்கள் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் 47 பேர் காயமடைந்தனர் என உலக சுகாதார  அமைப்பு தெரிவித்துள்ளது. 

5,47,000-க்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஷாபெல் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது, பெல்ட்வெய்ன்  நகரத்தில் அபாய அளவை தாண்டியுள்ளது. இதன் விளைவாக 2,32,000 பேர் சொந்த இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு  சென்றனர். 

ஹிர்ஷாபெல்லே, ஜுபாலாந்து மற்றும் தென்மேற்கு மாநிலங்களில் உள்ள ஜூபா மற்றும் ஷாபெல் நதிகளின் அருகில் உள்ள  பெரும்பாலான கரையோர பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன, என மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்புக்கான ஐ.நா. அலுவலகம்  (OCHA) தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News