உள்ளூர் செய்திகள்
மண்பானை உற்பத்தி செய்யும் தொழிலாளி.

தென்காசியில் கூடுதல் மழையால் பொங்கல் பானைகள் தேக்கம்

Published On 2022-01-11 10:35 GMT   |   Update On 2022-01-11 10:35 GMT
தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக தொடர் மழை பெய்ததால் பொங்கல் பானைகள் விற்பனை பாதிப்படைந்துள்ளது.
தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் இலஞ்சி, சுந்தரபாண்டியபுரம், செங்கோட்டை, விசுவநாதபுரம், தேன்பொத்தை, கட்டளைகுடியிருப்பு, ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 

இங்கு கார்த்திகை தீப அகல் விளக்குகள், பொங்கல் பானை, அடுப்பு, மண் குவளைகள், பூந்தொட்டி போன்றவை தயாரிக்கப்படுகிறது. 

பொங்கல் பண்டிகை காலங்களில் இந்த பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான பானைகள் தயார் செய்யப்பட்டு தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அனுப்பி வைக்கப்படும். 

இந்த ஆண்டு தொடர் மழையால் மண்பானை உற்பத்தி மந்தமடைந்துள்ளது. பொங்கலுக்கு 2 மாதங்களுக்கு முன்பே மண்பானை உற்பத்தி தொடங்கும் நிலையில், இந்த வருடம் தொடர் மழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் மண்பாண்ட உற்பத்தி என்பது முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

 இங்கு உள்ள தொழிலாளர்கள் தற்போது பூந்தொட்டி, அடுப்பு போன்றவற்றையே தயாரித்து வருகின்றனர்.

 மழைக்காலம் தற்போது தான் முடிவடைந்து உள்ளதால், இனி மண்பானை உற்பத்தி செய்து விற்பனை செய்வது என்பது கேள்விக்குறி என மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News