தொழில்நுட்பம்
சாம்சங் ஸ்மார்ட்போன்

120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவுடன் விரைவில் இந்தியா வரும் புது சாம்சங் ஸ்மார்ட்போன்

Published On 2021-04-03 04:29 GMT   |   Update On 2021-04-03 04:29 GMT
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவின் சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது.


சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது. அந்த வகையில் புது கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தெரிகிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போனின் 4ஜி மற்றும் 5ஜி வேரியண்டை சில வாரங்களுக்கு முன் ஐரோப்பாவில் அறிமுகம் செய்தது.

கனெக்டிவிட்டி மட்டுமின்றி இரு மாடல்களின் பிராசஸர் மற்றும் ரிப்ரெஷ் ரேட் உள்ளிட்டவை முற்றிலும் வேறுபடும் என தெரிகிறது. இதன் 5ஜி வேரியண்ட் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அந்த வகையில் இதன் இந்திய வேரியண்டும் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.



இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி கேலக்ஸி ஏ52 5ஜி மாடல் SM A526B/DS எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக இதே போன்ற மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் எப்சிசி வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது. 

ஐரோப்பிய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 429 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 37 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆசம் பிளாக், ஆசம் புளூ, ஆசம் வைலட் மற்றும் ஆசம் வைட் போன்ற நிறங்களில் வெளியிடப்பட்டது.
Tags:    

Similar News