செய்திகள்
வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

மேற்கு வங்கத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ

Published On 2021-03-04 05:11 GMT   |   Update On 2021-03-04 05:11 GMT
மேற்கு வங்க மாநிலத்தில் எடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், பாஜக பணியாளர்கள் போலீஸ் பாதுகாப்பை மீறி வீடு ஒன்றின் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

வைரல் வீடியோ, அரசியல் கட்சி இப்படி தான் மாநிலத்தில் அமைதியை கெடுக்கிறது எனும் தலைப்பில் பகிரப்பட்டு வருகிறது. விவசாயிகள் டெல்லியில் கலவரம் செய்கிறார்கள் எனில், பாஜக மேற்கு வங்கத்தில் இப்படி தான் அமைதியை நிலைநாட்ட முயற்சிக்கிறதா எனும் தலைப்பில் பலர் இதே வீடியோவை பேஸ்புக்கில் சிலர் பகிர்ந்து வருகின்றனர். 



வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது மேற்கு வங்கத்தில் எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த வீடியோ தெலுங்கானாவில் எடுக்கப்பட்டது ஆகும். ஜனவரி 31 ஆம் தேதி பாஜக பணியாளர்கள் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ செல்ல தர்மா ரெட்டியின் வீடு மீது தாக்குதல் நடத்தினர். எம்எல்ஏ தர்மா ரெட்டி ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கான நன்கொடை வசூல் குறித்து தெரிவித்த கருத்தை எதிர்க்கும் வகையில் அவரது வீடு தாக்கப்பட்டது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News