உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஈரோடு மாவட்டத்தில் இருந்து இன்று 100 சிறப்புபஸ்கள் இயக்கம்

Published On 2022-01-12 09:52 GMT   |   Update On 2022-01-12 09:52 GMT
பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்காக ஈரோட்டில் இருந்து இன்று பல்வேறு பகுதிகளுக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
ஈரோடு:

பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்காக ஈரோட்டில் இருந்து இன்று பல்வேறு பகுதிகளுக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

பொங்கல்பண்டிகை நாளைமறுநாள் உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. இதை தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

எனவே பொங்கல்பண்டிகை கொண்டாட ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று ஏராளமானோர் பஸ்நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் குவிந்தனர். 
 
மக்கள் சிரமமின்றி தங்களது சொந்தஊருக்கு செல்வதற்காக தமிழ்நாடுஅரசு போக்குவரத்துகழகம் ஈரோடுமண்டலம் சார்பில் நேற்று இரவு முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

நேற்று இரவு 40 சிறப்புபஸ்கள் இயக்கப்பட்டன. கோவை, சேலம், கரூர், திருச்சி, மதுரை, சென்னை போன்ற ஊர்களுக்கு இந்த சிறப்புபஸ்கள் இயக்கப்பட்டன. 

அதைதொடர்ந்து இன்று இரவு ஈரோடுமாவட்டத்தில் இருந்து  பல்வேறு மாவட்டங்களுக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படஉள்ளது. 

இதைத்தொடர்ந்து நாளை இரவும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 100 சிறப்புபஸ்கள் இயக்கப்பட உள்ளன. 

மேலும் பயணிகளின் எண்ணிக்கை, தேவைக்குஏற்ப கூடுதலாக பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈரோடு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News