ஆன்மிகம்
ஆதிகேசவ பெருமாள்

பள்ளிபாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நாளை காலை சொர்க்கவாசல் திறப்பு

Published On 2020-12-24 07:49 GMT   |   Update On 2020-12-24 07:49 GMT
பள்ளிபாளையம் காவிரி கரையில் அமைந்துள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக நடைபெற உள்ளது.
பள்ளிபாளையம் காவிரி கரையில் அமைந்துள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக நடைபெற உள்ளது. சிறப்பம்சமாக இந்தாண்டு 25-ம் ஆண்டு வெள்ளி விழா ஆண்டாக வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது.

அதன்படி நாளை காலை 4 மணிக்கு சுப்ரபாதத்துடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. தொடர்ந்து 4.30 மணிக்கு மங்கல இசையும், 5 மணிக்கு வைகுண்ட ஏகாதசி விசேஷ பூஜையும், 5.40 மணிக்கு பரமபத வாசல் என்னும் சொர்க்கவாசல் திறப்பு விழாவும் நடைபெற உள்ளது. இதையடுத்து ஆதிகேசவ பெருமாளுக்கு பூக்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வேதமந்திரங்கள், சுப்ரபாதம் ஒலிக்க சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.

விழாவை காணவரும் அனைத்து பக்தர்களுக்கும் லட்டு வழங்குவதற்காக 20 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யப்படுகிறது. லட்டு தயாரிப்பு பணியில் 50 பணியாளர்கள் இரவு, பகலாக வேலை செய்து வருகிறார்கள். பக்தர்களுக்காக நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது. அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை விதவிதமான கலவை சாதங்கள் வழங்கப்பட உள்ளது. லட்டுடன் சேர்த்து வெண்பொங்கல், சாம்பார் சாதம், புளிசாதம், தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், குழம்பு சாதம், மல்லி சாதம், கேரட் சாதம், மாங்காய் சாதம், மிளகு சாதம், தயிர் சாதம்,, பால் பாயாசம், ரவா கேசரி போன்ற சாதங்கள் அன்னதானமாக நாள் முழுவதும் வழங்கப்பட உள்ளன.

இதி்ல் 50 சமையல் கலைஞர்கள் வேலை செய்து வருகிறார்கள். பக்தர்கள் அனைவரும் அரசு வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முககவசம் அணிந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆதிகேசவ பெருமாள் கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News