செய்திகள்

திரிபுராவில் தனியாக ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பெற்றது பா.ஜ.க.

Published On 2018-03-03 13:58 GMT   |   Update On 2018-03-03 13:58 GMT
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் பா.ஜ.க. 32 இடங்களில் வெற்றி பெற்று தனியாக ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பெற்றுள்ளது பா.ஜ.க.வினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அகர்தலா:

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து சட்டசபைகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இந்த 3 மாநிலங்களும் தலா 60 சட்டசபை தொகுதிகள் கொண்டவை. 3 மாநிலங்களிலும் வேட்பாளர் மரணம் உள்ளிட்ட காரணங்களால் தலா 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.

இன்று காலை 8 மணிக்கு இந்த மாநிலங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கை தொடங்கியது. இதில் திரிபுரா, நாகலாந்தில் பா.ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடக்கத்தில் ஆட்சி அமைக்க தேவையான 30 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னணி வகித்து வந்தது. அதன்பின்னர், பா.ஜனதா நெருக்குதல் கொடுத்து ஆளும் கட்சியை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகித்து வந்தது.

மாலை 6 மணி நிலவரப்படி பா.ஜ.க. 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதையடுத்து, திரிபுராவில் பா.ஜ.க. தனியாக ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பெற்றுள்ளது பா.ஜ.க. தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. #tamilnews
Tags:    

Similar News