வழிபாடு
புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதியுலா.

மகாமாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா

Published On 2022-04-05 05:26 GMT   |   Update On 2022-04-05 05:26 GMT
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பாடைக்காவடி திருவிழா இந்த ஆண்டு கடந்த 27-ந்தேதி நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிலையில் நேற்று புஷ்ப பல்லக்கு விழா நடைபெற்றது.

இதையொட்டி கோவிலில் மகாமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பாலாபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பால் காவடி, அலகு காவடி, பால்குடம்,தொட்டில் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 10 மணி அளவில் மகாமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் புஷ்பபல்லக்கு வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News