தொழில்நுட்பம்
இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம் செயலியில் அசத்தல் அம்சங்கள்

Published On 2019-08-16 12:43 GMT   |   Update On 2019-08-16 12:43 GMT
இன்ஸ்டாகிராம் செயலியில் அசத்தல் அம்சங்கள் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.



ஃபேஸ்புக் நிறுவனத்தின் எஃப்8 நிகழ்வில் அந்நிறுவனம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. இவற்றில் சில ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் இருந்தன. அந்த வரிசையில் இன்ஸ்டாகிராம் செயலியில் ஸ்டோரிக்களில் லே-அவுட், புதிய பூமராங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

தற்சமயம் இந்த புதிய அம்சங்கள் இன்ஸ்டாகிராமில் சோதனை செய்யப்படுகின்றன. ஃபேஸ்புக் எஃப்8 நிகழ்வில் இன்ஸ்டாகிராம் செயலியில் புதிதாக ஸ்டோரி கேமரா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் யூசர் அனுபவம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. புதிய மாற்றங்கள் ஸ்டோரி லே-அவுட்டில் விரைவில் காண முடியும்.



லே-அவுட் மாற்றங்கள் கிட்டத்தட்ட இறுதிக்கட்ட பணிகளில் இருப்பதால், இது விரைவில் வழங்கப்படலாம் என தெரிகிறது. இன்ஸ்டாகிராம் செயலியில் லே-அவுட் அம்சம் கொண்டு பயணர்கள் பல்வேறு புகைப்படங்களை உருவாக்கிக் கொள்ள முடியும். இதற்கான அப்டேட் எப்போது வேண்டுமானாலும் வெளியிடப்படலாம்.

இதுதவிர பூமராங் அம்சமும் மேம்படுத்தப்படுவதாக தெரிகிறது. 2016 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த அம்சத்தில் பல்வேறு மோட்கள் சோதனை செய்யப்படுகின்றன. கிளாசிக் பூமராங், ஹோல்ட், டைனமிக், டுயோ மற்றும் டுயோ 2 போன்றவை இருக்கின்றன. செயலியில் புதிய அம்சங்களுடன் வலைத்தள செட்டிங், கமென்ட் ஷேரிங், நோட்டிஃபிகேஷன் செட்டிங் உள்ளிட்டவையும் மாற்றப்பட இருக்கின்றன.

சமீபத்தில் இந்நிறுவனம் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி (ஏ.ஆர். டூல்) எஃபெக்ட், ஸ்பார்க் ஏ.ஆர். உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்தது. இதை கொண்டு யார் வேண்டுமானாலும் 3டி ஃபேஸ் ஃபில்ட்டரை உருவாக்க முடியும். முன்னதாக ஏ.ஆர். டூல் அம்சம் அனுமதிக்கப்பட்ட கிரியேட்டர்களுக்கு மட்டுமே வழங்கபப்ட்டிருந்தது. 
Tags:    

Similar News