உலகம்
கொரோனாவுடன் வாழ அமெரிக்கா தயாராகிறது

கொரோனாவுடன் வாழ அமெரிக்கா தயாராகிறது - மூத்த மருத்துவ நிபுணர் சொல்கிறார்

Published On 2022-01-12 08:07 GMT   |   Update On 2022-01-12 08:07 GMT
தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு அதன் காலக்கெடு வரை பலன் கிடைக்கிறது. ஆனால் அதன் பிறகு நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி திறன் குறைந்துள்ளது என மூத்த மருத்துவ நிபுணர் கூறியுள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உயர்ந்தபடியே இருந்து வருகிறது. அங்கு உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பரவிய பிறகு தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தினசரி பாதிப்பு 10 லட்சத்தை கடந்து இருக்கிறது. இதனால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன.

இந்த நிலையில் கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள அமெரிக்கா தயாராகிக் கொண்டிருக்கிறது என்று அந்நாட்டின் அரசின் மூத்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஆண்டனி பாசி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் நோயை நீக்குவது என்பது உண்மைக்கு மாறானது. ஒமைக்ரான் வைரஸ் அசாதாரணமாக இருக்கிறது. முன்னோடி இல்லாத அளவிலான பரிமாற்ற திறனுடன் இருப்பதால் ஒவ்வொருவரையும் அது பாதிக்கும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு மற்றும் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் சேர்க்கப்படுவது உயர்வாக இருந்தாலும் அமெரிக்கா சமாளிக்கக்கூடிய ஒரு நோயாக கொரோனா வைரசுடன் வாழ்வதற்கான வாசலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வைரசை நாம் ஒழிக்கப்போவது இல்லை. அதற்கான வழியும் இல்லை.

தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு அதன் காலக்கெடு வரை பலன் கிடைக்கிறது. ஆனால் அதன் பிறகு நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி திறன் குறைந்துள்ளது.



நாடு ஒரு புதிய கட்டத்துக்குள் நுழையும் என்று நம்புகிறோம். சமூகத்தில் போதுமான பாதுகாப்பு இருக்கும். போதுமான மருந்துகள் கிடைக்கும். இதனால் நோய் தொற்று ஏற்பட்டு அதிக ஆபத்தில் இருந்தால் அந்த நபருக்கு சிகிச்சை அளிப்பது மிக எளிதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News