செய்திகள்
ஜஸ்டின் லாங்கர்

டி20 உலக கோப்பைக்கு தயாராக ஐபிஎல் சிறந்த தொடராக இருந்திருக்கும்: ஆஸ்திரேலியா பயிற்சியாளர்

Published On 2020-03-27 12:45 GMT   |   Update On 2020-03-27 12:45 GMT
ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கு தயாரக ஐபிஎல் சிறந்த தொடராக இருந்திருக்கும் என ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இந்த வருடம் அக்டோபர் 19-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 15-ந்தேதி வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

நாளை மறுதினம் ஐபிஎல் 2020 சீசன் தொடங்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏப்ரல் 15-ந்தேதி வரை ஐபிஎல் தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ந்தேதி வரை நாடு தழுவிய ஊடரங்கு உத்தரவு நடைமுறை படுத்தப்பட்டுள்ளதால் ஐபிஎல் 13-வது சீசன் நடைபெறுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

டி20 உலக கோப்பைக்கு தயாராக ஐபிஎல் சிறந்த தொடராக இருக்கும் என கருதப்பட்டது. இதனால் அனைத்து சர்வதேச அணிகளும் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட தங்களது நாட்டு வீரர்களை விளையாட அனுப்ப தயாராக இருந்தன. இந்நிலையில்தான் கொரோனாவல் ஐபிஎல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘கொரோனா வைரஸ் தொற்று பீதி ஏற்படுவதற்கு முன்பு, உண்மையாகவே எங்களுடைய வீரர்களை ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு அனுமதிக்க தீர்மானித்திருந்தோம்.

ஏனென்றால் ஐபிஎல் தொடரை தொடர்ந்து டி20 உலக கோப்பை வர இருக்கிறது. இதைவிட சிறந்த மைதானம், பயிற்சி, தொடர் உலக கோப்பைக்கு தயாராக இருக்க முடியாது.

ஆனால் திடீரென எல்லா விஷயங்களும் மிகப்பெரிய அளவில் மாறிவிட்டன. தனிப்பட்ட எங்கள் வீரர் உடல்நலம் மட்டுமல்ல, ஆஸ்திரேலியா, இந்தியா என ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலமும் முக்கியமானது.

உலக கோப்பைக்கான தேர்வு குறித்து நான் கவலைப்படவில்லை. எங்கள் அணியில் இன்னும் ஒன்று அல்லது இரண்டு இடத்திற்கான வீரர்கள் மட்டுமே தேர்வு செய்ய வேண்டியுள்ளது. நாங்கள் மிகவும் செட்டில் ஆன அணி. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாங்கள் சிறப்பாக விளையாடினோம்’’ என்றார்.
Tags:    

Similar News