வழிபாடு
மன்னராஜா

இடையன்விளை மன்னராஜா கோவிலில் மார்கழி கொடை விழா இன்று தொடங்குகிறது

Published On 2021-12-30 05:54 GMT   |   Update On 2021-12-30 05:54 GMT
கொட்டாரம் அருகே உள்ள இடையன்விளை ஊர் மன்னராஜா கோவில் மார்கழி கொடைவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
இடையன்விளையில் பழமை வாய்ந்த மன்னராஜா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் 3 நாட்கள் கொடைவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டுக்கான மார்கழி கொடைவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

விழாவின் முதல் நாளான இன்று இரவு 7 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், இரவு 8 மணிக்கு இசக்கி அம்மன் சிலைகள் பிரதிஷ்டை செய்தல், 9 மணிக்கு சாஸ்தா கதை வில்லிசை, 10 மணிக்கு தீபாராதனை, 11 மணிக்கு குருசாமி கதை வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு பூஜையும் நடக்கிறது.

விழாவில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு பத்ரகாளி அம்மன் கதை வில்லிசை, 10 மணிக்கு பூஜை, 11 மணிக்கு மன்னராஜா கதை வில்லிசை, மதியம் 1 மணிக்கு மன்னராஜா சாமிக்கு சிறப்பு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு நடுஇரவு பூஜை ஆகியவை நடக்கிறது.

விழாவின் 3-ம் நாளான வருகிற(ஜனவரி) 1-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு அனைத்து தெய்வங்களுக்கும் அமுது படைத்து வழிபாடு, 5 மணிக்கு பிரசாதம் வழங்குதல், காலை 7 மணிக்கு சமபந்தி விருந்து ஆகியவை நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை மன்னராஜா கோவில் அறங்காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News