செய்திகள்
ஜஸ்டின் ட்ரூடோ

ஹூவாய் 5ஜி நெட்வொர்க் அனுமதி குறித்து சில வாரங்களில் முடிவு: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

Published On 2021-09-28 20:57 GMT   |   Update On 2021-09-28 20:57 GMT
5ஜி நெட்வொர்க்சேவை வழங்கி வரும் ஹூவாய் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து இன்னும் சில வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் 4ஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சில நாடுகள் அடுத்த தலைமுறையான 5ஜி வயர்லெஸ் நெட்வொர்க்கை பயன்படுத்த தொடங்கியுள்ளன. சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய் 5ஜி சேவை வழங்கி வருகிறது.

பெரும்பாலான நாடுகள் 5ஜியை பயன்படுத்துவதால், தங்களுடைய நாட்டின் ரகசியங்கள் திருடப்படுவதாக அனுமதி கொடுக்காமல் இருக்கின்றன. அமெரிக்கா ஹூவாய் நிறுவனத்தின் மீது இதுகுறித்து குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவில் சோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கனடாவில் 5ஜி நெட்வொர்க் வழங்க ஹூவாய் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து சில வாரங்களில் முடிவு செய்யப்படும் என அந்நாட்டு பிரதமர்  ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஆனால், கனடாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களான பெல் கனடா, டெலஸ் கார்பரேசன் போன்ற நிறுவனங்கள் ஹூவாய் 5ஜி நெட்வொர்க்கை பயன்படுத்தமாட்டோம் எனத் தெரிவித்தள்ளது.

கனடாவும் அதன் பாதுகாப்பு நிறுவனங்களும் ஹூவாய் நிறுவனத்தில் இருந்து உபகரணங்களைப் பயன்படுத்தலாமா? என்று ஆய்வு செய்து வருகின்றன, ஏனெனில் தொலைபேசி சாதனங்கள் ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பத்தை உருவாக்கத் தயாராகி வருகின்றன. இது மருத்துவ சாதனங்கள்,  பிற பயன்பாடுகளுக்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News