உள்ளூர் செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் கல்வியை பாதியில் நிறுத்திய 15,120 மாணவர்கள்

கடலூர் மாவட்டத்தில் கல்வியை பாதியில் நிறுத்திய 15,120 மாணவர்கள்

Published On 2022-05-04 11:50 GMT   |   Update On 2022-05-04 11:50 GMT
கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பால், அவர்கள் பள்ளி செல்லா நிலை குறித்து கடலூர் மாவட்டம் முழுவதும் கல்வித்துறை சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
கடலூர்:

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. வகுப்பறைக்குச்சென்று மாணவ, மாணவிகளால் பாடம் படிக்க முடியாத சூழலை ஏற்படுத்தியதோடு, தேர்வு இல்லாமலேயே தேர்ச்சி என்ற நிலையையும் எட்டியது.

இதற்கும் மேலாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு வேலை இழப்பு, பொருளாதார பாதிப்பு, இட மாறுதல் போன்ற சூழல்கள் உருவானாதால், அதன் பாதிப்பும் மாணவர்களை நேரடியாக பாதித்த்து.

இவ்வாறு கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பால், அவர்கள் பள்ளி செல்லா நிலை குறித்து கடலூர் மாவட்டம் முழுவதும் கல்வித்துறை சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் 15,120 மாணவமாணவிகள் கல்வியை பாதியில் நிறுத்தியது தெரியவந்தது. இவ்வாறு இடைநின்ற மாணவர்களை மீட்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.பூபதி கூறியதாவது:

கடலூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா காலத்தில் 15,120 மாணவ மாணவிகள் பள்ளிப்ப டிப்பை பாதியில் நிறுத்தியது தெரியவந்தது. அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக 4,150 பேர் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.

பல்வேறு காரணங்களுக்காக மாணவர்கள் குடும்பத்தோடு பல்வேறு இடங்களுக்கு இட மாறுதலாகி உள்ளனர்.

இவர்களில் 1,084 மாணவர்கள் புதுவை உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு இடமாறுதலாகி உள்ளனர். 446 பேர் சென்னை, விழுப்புரம், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். 9,426 பேர் பாலிடெக்னிக், பட்டயப்படிப்புகளில் சேர்ந்துள்ளது தெரியவந்தது.

கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள் இருந்தாலோ அல்லது பள்ளிச்செல்லும் வயதில் பள்ளிக்குச்செல்லாமல் மாணவர்கள் இருந்தாலோ அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News