ஆன்மிகம்
விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு புஷ்பாபிஷேகம் நடந்ததையும், அதை காண திரண்டபக்தர்களையும் படத்தில் காணலாம்.

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் புஷ்பாபிஷேக விழா

Published On 2021-08-17 07:56 GMT   |   Update On 2021-08-17 07:56 GMT
ஆடி கடைசி திங்கட்கிழமையையொட்டி சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் புஷ்பாபிஷேக விழா நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி திங்கட்கிழமை புஷ்பாபிஷேகம் விழா நடைபெறுவது வழக்கம்.

அதே போல் இந்த ஆண்டுக்கான ஆடி கடைசி திங்கட்கிழமையையொட்டி நேற்று புஷ்பாபிஷேகம் நடந்தது.

மாலை 6.30மணி அளவில் தாணுமாலயன் சன்னதி, திருவேங்கட விண்ணவர பெருமாள், கொன்றையடி, அறம் வளர்த்த நாயகி அம்மன், சித்திர சபை, தட்சிணாமூர்த்தி, நீலகண்ட விநாயகர், கைலாசநாதர், சாஸ்தா, ராமர் சன்னதி, காலபைரவர் மற்றும் நிறைவாக 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு புஷ்பாபிஷேகவிழா நடந்தது. அதை தொடர்ந்து தீபாராதனையும் காட்டப்பட்டது.

புஷ்பாபிஷேகத்துக்கு கேந்தி, வாடா மல்லி பூக்களை தவிர்த்து பிச்சி, முல்லை, கொழுந்து, மருக்கொழுந்து, பச்சை, தாமரை, ரோஜா, அரளி, செண்பகப்பூ ஆகியவை பயன்படுத்தப்பட்டன. இதில் குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அலுவலக மேலாளர் தங்கம், நாகர்கோவில் தொகுதி கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News