செய்திகள்
மனு கொடுக்க வந்த பா.ம.க.வினர்.

நடிகர் சூர்யா, ஜோதிகா மீது நடவடிக்கை - பா.ம.க.வினர் போலீஸ் கமிஷனரிடம் மனு

Published On 2021-11-19 10:34 GMT   |   Update On 2021-11-19 10:34 GMT
நீதிமன்றத்தில் குருமூர்த்தி என்று முழு பெயரை அழைக்காமல் குரு குரு என்று அழைப்பது நீதிமன்ற சட்டத்துக்கு புறம்பானது.
திருப்பூர்:

நடிகர் சூர்யா, ஜோதிகா மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

இதுகுறித்து மாநில துணை பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமையில் நிர்வாகிகள் இன்று திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் என்ற திரைப்படம் 1995-ம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய சாதியான வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

கருத்து சுதந்திரம் என்று சொல்லி ஒரு சமூகத்தை இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக இத்திரைப்படத்தை எடுத்துள்ளனர். வில்லன் நடிகர் அந்தோணிசாமி என்ற பெயரை குருமூர்த்தி என்று காட்டி இழிவுப்படுத்தி உள்ளனர். நீதிமன்றத்தில் குருமூர்த்தி என்று முழு பெயரை அழைக்காமல் குரு குரு என்று அழைப்பது நீதிமன்ற சட்டத்துக்கு புறம்பானது. 

வேண்டுமென்றே ஜெ.குருவை இழிவுபடுத்தி படம் வெளியிடப்பட்டுள்ளது. சாதி பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் படமெடுத்த படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News