செய்திகள்
மருத்துவ பணியாளர்கள்

கொரோனா இரண்டாவது அலையில் இதுவரை 646 டாக்டர்கள் மரணம்- டெல்லியில் அதிகம்

Published On 2021-06-05 12:18 GMT   |   Update On 2021-06-05 12:18 GMT
கொரோனா இரண்டாம் அலையில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பிற முன்களப் பணியாளர்கள் அதிக அளவில் பலியாகின்றனர்.
புதுடெல்லி:

நாட்டின் கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது புதிய தொற்று குறைந்தபோதிலும், உயிரிழப்புகள் கவலை அளிப்பதாக உள்ளன. முதல் அலையின்போது இருந்ததைவிட இரண்டாம் அலையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பிற முன்களப் பணியாளர்கள் அதிக அளவில் பலியாகின்றனர்.

இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலையின்போது பாதிக்கப்பட்ட முன்களப் பணியாளர்களில் இதுவரை 646 டாக்டர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் கூறி உள்ளது. 

அதிகபட்சமாக டெல்லியில் 109 டாக்டர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளனர். பீகாரில் 97 பேரும், உத்தர பிரதேசத்தில் 79 பேரும், ராஜஸ்தானில் 43 பேரும் இறந்துள்ளனர்.  தமிழகத்தில் 32 டாக்டர்கள் இறந்துள்ளனர்.
Tags:    

Similar News