தொழில்நுட்பம்
சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா

மேம்பட்ட கேமரா, வளைந்த ஸ்கிரீன் கொண்டு உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்

Published On 2021-11-05 14:54 GMT   |   Update On 2021-11-05 14:54 GMT
சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது.


சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல் புது விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய சாம்சங் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே மற்றும் கேமரா அம்சங்கள் பற்றிய புது தகவல்கள் ட்விட்டரில் இடம்பெற்று இருக்கிறது.

அதன்படி புதிய கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் மேம்பட்ட 108 எம்பி கேமரா மோட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 108 எம்பி பிரைமரி கேமரா கொண்டு உருவாகிறது. இது ஐசோசெல் ஹெச்.எம்.4 அல்லது ஐசோசெல் ஹெச்.எம்.5 சென்சார்களில் ஒன்றாக இருக்கும் என தெரிகிறது.



மேலும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் இருப்பதை போன்றே வளைந்து இருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா மாடலை விட புதிய ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் அதிகளவு வளைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 2200 சிப்செட், ஆர்.டி.என்.ஏ. 2 கிராபிக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News