ஆன்மிகம்
கும்பாபிஷேகம்

திருப்பரங்குன்றம் அருகே 3 கோவில்களில் கும்பாபிஷேகம்

Published On 2020-08-31 09:01 GMT   |   Update On 2020-08-31 09:01 GMT
திருப்பரங்குன்றம் அருகே உள்ள 3 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் பொங்கலிட்டு சாமிக்கு படைத்து வழிபட்டனர்.
திருப்பரங்குன்றம் அருகே பெரிய ஆலங்குளத்தில் வைகை மறச்சான் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலின் கோபுரகலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதனையடுத்து கோவிலின் கருவறையில் வைகை மறச்சான் அய்யனாருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

இதேபோல வாலகுருநாதர் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து கருவறையில் வாலகுருநாதர் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், கவுன்சிலருமான நிலையூர் முருகன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர் சந்தனதேவர், ஊராட்சி செயலாளர் குரு, சசிகுமார், முருகன், சோணைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றத்தை அடுத்த ஒத்தஆலங்குளத்தில் சீலக்காரிஅம்மன்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் பொங்கலிட்டு சாமிக்கு படைத்து வழிபட்டனர். இதில் முன்னாள் கவுன்சிலர் பெரியசாமி, கிளை செயலாளர் சோமு, பிரதிநிதி மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News