செய்திகள்
பாராளுமன்றம்

அதிமுக எம்.பி. முகமது ஜான் மறைவுக்கு மேல்சபையில் அனுதாபம்

Published On 2021-03-24 09:07 GMT   |   Update On 2021-03-24 09:07 GMT
மேல்சபை எம்.பி.யான முகமது ஜான் மறைவுக்கு பாராளுமன்ற மேல்சபையில் இன்று அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
புதுடெல்லி:

அ.தி.மு.க. மேல்சபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான முகமது ஜான் தனது சொந்த ஊரான ராணிப்பேட்டையில் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

அவர் 2019-ம் ஆண்டு மேல்சபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தேர்வு செய்யப்பட்டார். இதுதவிர தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் பணியாற்றினார். 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா மந்திரி சபையில் 2 ஆண்டுகள் மந்திரியாக பணியாற்றினார்.

மேல்சபை எம்.பி.யான முகமது ஜான் மறைவுக்கு பாராளுமன்ற மேல்சபையில் இன்று அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

மேல்சபை தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் செய்தியை வாசித்தார். முகமது ஜான் எம்.பி.யின் மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சபை 1 மணிநேரம் ஒத்தி வைக்கப்பட்டது.


Tags:    

Similar News