தொழில்நுட்பம்
ரியல்மி

அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் ரியல்மி பிராண்டின் புதிய சாதனங்கள்

Published On 2019-12-25 07:59 GMT   |   Update On 2019-12-25 07:59 GMT
ரியல்மி பிராண்டு அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் சாதனங்கள் பற்றிய விவரங்களை பார்ப்போம்.



ரியல்மி பிராண்டு அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் ஃபிட்னஸ் பேண்ட் சாதனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுதவிர ரியல்மி பிராண்டு VOOC பவர் பேங்க் சாதனத்தையும் இந்தியாவில் அறிமுகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்திய சந்தையில் வாழ்வியல் சார்ந்த தொழில்நுட்ப பிராண்டாக ரியல்மியை உருவாக்குவதே நிறுவனத்தின் நோக்கம் என ரியல்மி தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.



புதிய சாதனங்கள் தவிர ரியல்மி 1, 2 யு1 மற்றும் சி1 ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 24 மாதங்களுக்கு தொடர் அப்டேட்கள் மற்றும் சில கலர் ஒ.எஸ். அப்டேட்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். 

ஸ்கிரீன் ரெக்கார்டிங்கின் போது இன்டெர்னல் ஆடியோ ரெக்கார்டிங் வசதி கலர் ஒ.எஸ். 7 வெர்ஷனில் சேர்க்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். கலர் ஒ.எஸ். 7 அப்டேட் அடுத்த ஆண்டு வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் ப்ளூடூத் ஹெட்போன், ரியல்மி எக்ஸ்.டி. மற்றும் இதர சாதனங்களுக்கு டால்பி அட்மோஸ் வசதி வசதி கலர் ஒ.எஸ். 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டில் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News