உள்ளூர் செய்திகள்
பள்ளி கட்டிடம் கட்ட ரூ.1லட்சம் நிதி வழங்கிய இளநீர் வியாபாரி.

பள்ளி கட்டிடம் கட்ட ரூ.1லட்சம் நன்கொடை வழங்கிய இளநீர் வியாபாரி

Published On 2022-01-13 05:01 GMT   |   Update On 2022-01-13 06:34 GMT
தாயம்மாள் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். அவரது கணவர் கூலித்தொழிலாளி ஆவார்.
உடுமலை:

உடுமலை அருகே சின்னவீரம்பட்டி நடுநிலைப் பள்ளியில், எல்.கே.ஜி., முதல் 8ம் வகுப்பு வரை 650 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த கல்வியாண்டுகளில் சராசரியாக 160 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ளது.

இதனால் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் கூடுதல் கட்டிடம் எழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.15 லட்சம் பெறப்பட்டது. அதன்பேரில் கூடுதலாக 4 வகுப்பறைகள் கட்ட அரசால் ரூ. 30 லட்சம் ஒதுக்கீடும் செய்யப்பட்டது. 

இருப்பினும் மேலும் கட்டிடம் எழுப்ப நிதி கோரப்பட்டிருந்தது. இதை அறிந்த  சின்னவீரம்பட்டியைச் சேர்ந்த தாயம்மாள் என்பவர் தனது சொந்த சேமிப்பில் இருந்து ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார்.

இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியர் இன்பக்கனி கூறுகையில்:

தாயம்மாள் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். அவரது கணவரும் கூலித்தொழிலாளி ஆவார். அவரை கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர், கல்வி மாவட்ட அலுவலர் ஆகியோர் நேரில் வாழ்த்தினர் என்றார்.

திருப்பூர் மாநகராட்சி சார்பில் தொழில்துறையினர், தன்னார்வ அமைப்புகள், பொதுமக்களுக்கு நமக்கு நாமே திட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து வளர்ச்சிப் பணிகளுக்கு 3ல் ஒரு பங்கு நிதி பங்களிப்பு செய்து இணைந்து செயல்பட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அவ்வகையில், ஆலாங்காடு பகுதியில் ரோடு மேம்படுத்தும் பணிக்கு தனியார் காட்டன் மில் நிறுவனம் சார்பில் ரூ.9.83 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலை மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமாரிடம் நிறுவனம் சார்பில் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News