உள்ளூர் செய்திகள்
கும்பாபிஷேகம் நடந்த காட்சி.

ஆறுமுகநேரி கோவிலில் கும்பாபிஷேக விழா

Published On 2022-01-18 09:22 GMT   |   Update On 2022-01-18 09:22 GMT
ஆறுமுகநேரி லட்சுமி மாநகரம் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா 4 நாட்கள் நடைபெற்றது. இதனையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி லட்சுமி மாநகரம் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா 4 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் அதிகாலையில் யாக பூஜை தொடங்கியது. 

விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், கஜ பூஜை ஆகியவை நடந்தன. மாலையில் தீர்த்த பவனி நடைபெற்றது.

2-வது நாள் காலையில் மகாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், துர்கா ஹோமம், அஸ்தர ஹோமம், தன பூஜை மற்றும் கோ பூஜை நடந்தன. மாலையில் யாகசாலை பிரவேசம் மற்றும் கும்ப அலங்கார பூஜை நடந்தன.

3-வது நாள் காலையில் நடந்த யாகசாலை பூஜையில் வேத பாராயணம், திருமுறை பாராயணம், தீபாராதனை ஆகியவை நிகழ்ந்தன. இரவில் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது.

நிறைவு நாளான நேற்று காலையில் 4-ம் கால யாகசாலை பூஜை, கோபுர விமான கலச மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. 

தொடர்ந்து மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன்பின் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் மகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
Tags:    

Similar News