செய்திகள்
தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனை

மருத்துவமனை தீ விபத்தில் 10 குழந்தைகள் பலி- தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

Published On 2021-01-09 04:24 GMT   |   Update On 2021-01-09 07:21 GMT
மகாராஷ்டிராவில் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரா:

மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தன. 7 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. இந்த சம்பவம் மாநிலத்தையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் டோப் தெரிவித்தார். 

தீ விபத்து தொடர்பாக பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பண்டாராவில் நிகழ்ந்த, இதயத்தை நொறுக்கும் துயரமான சம்பவத்தில், நாம் விலைமதிப்பற்ற இளம் உயிர்களை இழந்துவிட்டோம் என்று கூறி உள்ளார்.

இதேபோல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News