தொழில்நுட்பம்
போட் பிளாஷ் ஸ்மார்ட்வாட்ச்

பத்து ஸ்போர்ட்ஸ் மோட் வசதி கொண்ட புது ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்

Published On 2021-03-10 11:36 GMT   |   Update On 2021-03-10 11:36 GMT
போட் நிறுவனம் இந்திய சந்தையில் பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் மாடலை மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்தது.


ஸ்மார்ட்போன் அக்சஸரீ மற்றும் ஆடியோ சாதனங்களை விற்பனை செய்து பிரபலமான போட் நிறுவனம் இந்திய சந்தையில் பிளாஷ் எனும் பெயரில் புது ஸ்மார்ட் வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் வாட்ச் வட்ட வடிவ எல்சிடி கலர் டிஸ்ப்ளே, மெல்லிய மெட்டாலிக் டிஸ்ப்ளே, டூயல் டோன் சிலிகான் ஸ்டிராப்களை கொண்டுள்ளது.



இதில் உள்ள சென்சார்கள் பிட்னஸ் டிராக்கிங் மற்றும் இதர பணிகளை மேற்கொள்கிறது. IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் போட் பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் பல்வேறு சென்சார்களை கொண்டிருக்கிறது. மேலும் இதில் 10 ஆக்டிவ் ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. 

போட் பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல் வசதி, நோட்டிபிகேஷன் மற்றும் 200 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 நாட்களுக்கு தேவையான ஸ்டான்ட்பை வழங்குகிறது.

புதிய போட் பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் ஆக்டிவ் பிளாக், எலெக்ட்ரிக் புளூ மற்றும் விவிட் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2499 ஆகும். விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.
Tags:    

Similar News