செய்திகள்
கோப்புப்படம்.

பயணிகள் வருகை குறைவால் திருப்பூர் அரசு போக்குவரத்து கழகத்தில் வருவாய் சரிவு

Published On 2021-07-20 10:46 GMT   |   Update On 2021-07-20 10:46 GMT
இலவச பயணம் என்ப தால், ஆண் பயணிகளை விட பெண் பயணிகள் அதிக அளவில் டவுன் பஸ் களில் பயணிக்கின்றனர்.
திருப்பூர்:

கொரோனா ஊரடங்குக்கு பின் கடந்த  5-ந்தேதி முதல் பஸ் இயக்கத்துக்கு அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து திருப்பூர் மண்டலத்தில் 90 சதவீத வெளியூர் மற்றும் 70 சதவீத டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன

இலவச பயணம் என்பதால், ஆண் பயணிகளை விட பெண் பயணிகள் அதிக அளவில் டவுன் பஸ்களில் பயணிக்கின்றனர். இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள் வராததால் வருவாய் குறைந்துள்ளதாக  அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.  

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 

50 சதவீத பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால் காலை, மாலை நேரங்களில் மட்டும் பயணிகள் வருகை அதிகம் உள்ளது. மற்ற நேரங்களில் கூட்டமில்லை. இரவு, அதிகாலையில் பயணிகள் எண்ணிக்கை சொற்பமாகவே உள்ளது என்றனர்.

மேலும் திருப்பூர் மாவட்டத்தில் தனியார் பஸ் இயக்கம் முழு அளவில்  தொடங்கவில்லை. 30 சதவீதம் மட்டுமே இயங்குகிறது. கடந்த 5-ந்தேதி முதல்,15-ந்தேதி வரை திருப்பூர் மண்டலத்தில் இருந்து 563 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. 


இவற்றில் 18 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இவர்களில்10 லட்சம் பேர் பெண்கள். 8லட்சம் பேர் ஆண்கள். கடந்த 2 வாரங்களாக பஸ்கள் இயங்கிய போதும், கலெக்ஷன் முன் போல் இல்லை. தினமும்  ரூ.10லட்சம் வருவாய் ஈட்டித்தரும் திருப்பூர் பணிமனை-1ல் ரூ.5லட்சம், பணிமனை-2ல் ரூ.7லட்சத்துக்கு பதில் ரூ.4 லட்சம் மட்டுமே வசூலாகிறது.

பழனி - 1 மற்றும் 2, தாராபுரம், பல்லடம், காங்கயம், உடுமலையை உள்ளடக்கிய திருப்பூர் மண்டலத்தில்  நாள் ஒன்றுக்கு ரூ.80 லட்சம் வருவாய் கிடைக்கும். தற்போது 50 சதவீதம் வருவாய் குறைந்து ரூ.39 லட்சம் மட்டுமே வருவாய் கிடைக்கிறது. இதனால் போக்குவரத்து கழக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News