செய்திகள்

தேர்தலையொட்டி ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு நாளை விடுமுறை

Published On 2019-04-17 10:17 GMT   |   Update On 2019-04-17 10:17 GMT
பாராளுமன்ற தேர்தலையொட்டி ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம்:

தென் தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் திகழ்கிறது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வருகின்றனர். இங்கிருந்து மதுரை, கோவை, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் காய்கறி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

குறிப்பாக கேரள மாநிலத்திற்கு அதிக அளவு காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. தினசரி ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

நாளை தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி வியாபாரிகள், விவசாயிகள் வாக்களிப் பதற்கு வசதியாக நாளை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மார்க்கெட் சங்க தலைவர் தங்கவேல், செயலாளர் ராசியப்பன், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் தெரிவித்தனர்.

இதனால் வர்த்தகம் பாதிக்கப்படும் என்றாலும் ஜனநாயகத்தை காப்பது நமது கடமை என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். எனவே விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வர வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News