உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை படத்தில் காணலாம்.

தொடர் விடுமுறை எதிரொலி: கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்

Published On 2022-04-16 06:55 GMT   |   Update On 2022-04-16 06:55 GMT
தொடர் விடுமுறை காரணமாக பெங்களூரு, ஓசூர் பகுதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு ஒரே நேரத்தில் மக்கள் புறப்பட்டு சென்றதால் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி,

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 4 நாட்கள் விடுமுறை விடப் பட்டுள்ளது. பெங்களூரு, சுற்று வட்டார பகுதிகளில் வசிக்க கூடிய பலருக்கும் நேற்று முதல் 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டுள்ளது.

எனவே அங்கு வசிக்கும் தமிழர்கள் மற்றும் ஓசூர் பகுதியில் உள்ளவர்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்களின் சொந்த ஊர்களுக்கு நேற்று புறப்பட்டு சென்றனர். இதனால் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் ஆயிரக் கணக்கான கார்கள் ஸ்தம்பித்து நின்றன. சுங்கச்சாவடி கடந்து செல்ல வாகனம் ஒன்றிற்கு சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் ஆனது.

போக்குவரத்து நெரிசல் 

குறிப்பாக ஓசூர், பெங்களூருவில் இருந்து கார்களில் அதிகம் பேர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில உள்ள தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றதை காண முடிந்தது. இதனால் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி பகுதியில் வழக் கத்திற்கும் மாறாக நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Tags:    

Similar News