செய்திகள்
கோப்புப்படம்

தமிழகம் முழுவதும் 3-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்

Published On 2021-09-26 04:03 GMT   |   Update On 2021-09-26 04:03 GMT
கோயம்பேடு பேருந்து நிலைய கொரோனா தடுப்பூசி முகாமில் அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை :

தமிழகம் முழுவதும் 3-ம் கட்டமாக மெகா கொரோனா தடுப்பூசி  முகாம் இன்று நடைபெற்றுவருகிறது. இதில் 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் இன்று 1,600 சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை பொதுமக்கள் http://chennaicorporation.gov.in/gcc/covid&details/megavacdet.jsp- என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாகவும், 044-25384520, 044-46122300 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் தெரிந்து கொள்ளலாம்.

கோயம்பேடு பேருந்து நிலைய கொரோனா தடுப்பூசி முகாமில் அமைச்சர் சேகர்பாபு,  மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர்  ஆய்வு மேற்கொண்டனர்.



சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் சிறப்பு தடுப்பூசி முகாமில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

*  முழு வீச்சில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

* தெருக்கள் வாரியாக நோய் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

* பொதுமக்கள் டீக்கடையில் இடைவெளி விட்டு டீ அருந்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News