செய்திகள்
கோப்புப்படம்.

கட்டிட தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.27 லட்சம் நஷ்டஈடு வழங்க கோர்ட்டு உத்தரவு

Published On 2021-07-18 08:25 GMT   |   Update On 2021-07-18 08:25 GMT
நகராட்சி சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதை தொடர்ந்து வரும் 29-ந் தேதிக்குள் இழப்பீடு வழங்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
பல்லடம்:

பல்லடம் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் அசோக்குமார், (வயது 41),கட்டட தொழிலாளி. இவர் கடந்த 2018ம் ஆண்டு மே 12-ந்தேதி  பல்லடம் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த  போது  நகராட்சி கழிப்பிட மேற்கூரை இடிந்து விழுந்து பலியானார்.

அவரது குடும்பத்தினருக்கு ஐகோர்ட் தீர்ப்பின்படி ரூ.27 லட்சம் இழப்பீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு  உத்தரவிட்டது.

 இது குறித்து வழக்கில் ஆஜரான வக்கீல் புருஷோத்தமன் கூறுகையில்,

அசோக்குமார் உயிரிழந்தபோதுஅவரது வயது 41. மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதை கருத்தில் கொண்டு ஐகோர்ட்டு  ரூ.27 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

இதை எதிர்த்து நகராட்சி நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. ஐகோர்ட்டு  தீர்ப்பின்படி அசோக்குமார் குடும்பத்துக்கு ரூ.27 லட்சம் வழங்க சுப்ரீம் கோர்ட்டு  உத்தரவிட்டது.

நகராட்சி சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதை தொடர்ந்து வரும் 29-ந்தேதிக்குள் இழப்பீடு வழங்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
Tags:    

Similar News