ஆட்டோமொபைல்
ஸ்கோடா கோடியக்

2021 ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் அறிமுகம்

Published On 2021-04-15 06:47 GMT   |   Update On 2021-04-15 06:47 GMT
ஸ்கோடா நிறுவனத்தின் 2021 கோடியக் பேஸ்லிப்ட் மாடல் பல்வேறு புது அம்சங்களை கொண்டிருக்கிறது.


ஸ்கோடா நிறுவனம் மேம்பட்ட கோடியக் பேஸ்லிப்ட் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. மூன்றடுக்கு இருக்கை கொண்ட புது எஸ்யுவி மாடலில் மேம்பட்ட முன்புறம் மற்றும் கேபின் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆர்எஸ் ட்ரிம் சார்ந்து உருவாகி இருக்கும் கோடியக் மாடல் இரு டீசல், மூன்று பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடலில் மேம்பட்ட முன்புற கிரில், எல்இடி ஹெட்லைட் வழங்கப்படுகிறது. மேலும் பயனர் விரும்பினால் எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட்களை பெறும் வசதியும் வழங்கப்படுகிறது. பின்புறம் எல்இடி டெயில் லேம்ப் புது டிசைனில் வழங்கப்படுகிறது. கோடியக் மாடல் 17 முதல் 20 இன்ச் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது.



2021 ஸ்கோடா கோடியக் மாடல் கேபினில் இரண்டு ஸ்போக் கொண்ட ஸ்டீரிங் வீல், ஆம்பியன்ட் லைட்டிங், 9.2 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், முன்புறம் லெதர் இருக்கைகள் உள்ளன. இத்துடன் 10.25 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

புதிய கோடியக் மாடல் 2.0 லிட்டர் என்ஜின், முன்புற வீல் டிரைவ் மற்றும் ஆல்-வீல் டிரைவ் வசதியுடன் வழங்கப்படுகிறது. இவை முறையே 147 பிஹெச்பி பவர் மற்றும் 197 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி யூனிட் வழங்கப்படுகிறது.

இத்துடன் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின், ஆக்டிவ் சிலிண்டர் தொழில்நுட்பம் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறை 147 பிஹெச்பி பவர், 188 பிஹெச்பி பவர் மற்றும் 241 பிஹெச்பி பவர் வழங்குகிறது. 
Tags:    

Similar News