ஆன்மிகம்
சுசீந்திரம் கோவில்

மார்கழி திருவிழாவையொட்டி சுசீந்திரம் கோவிலில் இன்று கருட தரிசனம்

Published On 2020-12-25 08:24 GMT   |   Update On 2020-12-25 08:24 GMT
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இன்று காலையில் கருட தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3-ம் நாளான நேற்று முன்தினம் இரவு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மக்கள்மார் சந்திப்பு நடந்தது.

4-ம் நாள் விழாவான நேற்று காலை பூத வாகனத்தில் சுவாமி ரதவீதியை சுற்றி வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10.30 மணிக்கு பரங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி ரதவீதியை சுற்றி வரும் நிகழ்ச்சியும் நடந்தது. 5-ம் திருவிழாவான இன்று காலையில் கருட தரிசனம் நிகழ்ச்சி நடந்தது.

முன்னதாக அதிகாலை 5 மணிக்கு சுவாமி ரி‌ஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி தரிசனம் நடந்தது. 6 மணிக்கு வீர மார்த்தாண்ட விநாயகர் கோவில் முன்பு சுவாமி அம்பாள், பெருமாள் ஆகியோர் அலங் கரிக்கப்பட்டு கிழக்கு நோக்கி எழுந்தருளினர். அப்போது கருடன் சுவாமி களை சுற்றி வலம் வரும் கருட தரிசன நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 8 மணிக்கு சுவாமி ரி‌ஷப வாகனத்தில் ரதவீதியை சுற்றி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

29-ந்தேதி காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடை பெறுகிறது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன. நள்ளிரவு 12 மணிக்கு சப்தா வர்ணநிகழ்ச்சியும், 30-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், மாலை 5 மணிக்கு நடராஜமூர்த்தி திருவீதி உலாவும், இரவு 9 மணிக்கு ஆறாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.

திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில் நிர்வாகம், அறங்காவலர் குழுவினர் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News