ஆன்மிகம்
வருடாபிஷேகம்

வீரதுர்க்கை அம்மன் கோவிலில் வருடாபிஷேகம்

Published On 2020-11-05 04:40 GMT   |   Update On 2020-11-05 04:40 GMT
பழனி முருகன் கோவிலின் உபகோவிலான வீரதுர்க்கையம்மன் கோவிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பழனி முருகன் கோவிலின் உபகோவிலான வீரதுர்க்கையம்மன் கோவிலில் நேற்று வருடாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காலை 10.30 மணிக்கு விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், சிறப்பு யாகம் நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு 16 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. அதையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

அதன்பின்னர் தலைமை அலுவலகத்தில் உள்ள சிவசக்தி விநாயகர் கோவில், பிரம்மதீர்த்த குளத்தில் உள்ள சிவன்-பார்வதி, மகாவிஷ்ணு, மயில் முருகன் ஆகிய கோவில்களுக்கும் வீரத்துர்க்கையம்மன் கோவிலிலே வருடாபிஷேகம் நடைபெற்றது. பூஜைகளை செல்வசுப்பிரமணியம் குருக்கள் தலைமையில் கோவில் குருக்கள்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் கிராந்திகுமார்படி, துணை ஆணையர் செந்தில்குமார், அலுவலக மேலாளர் சேகர், கோவில் கண்காணிப்பாளர் சண்முகவடிவு மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News