லைஃப்ஸ்டைல்
தக்காளி பன்னீர் சாண்ட்விச்

தக்காளி பன்னீர் சாண்ட்விச்

Published On 2019-09-23 04:32 GMT   |   Update On 2019-09-23 04:32 GMT
சாண்ட்விச் விருப்பத்திற்கேற்ப விருப்பமான காய்கறிகள், பழங்களை வைத்து செய்யலாம். இன்று தக்காளி, பன்னீரை வைத்து சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை பிரெட் - 6 துண்டுகள்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
தக்காளி - 1
குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
பன்னீர் - 1/2 கப்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு



செய்முறை :


தக்காளி, வெங்காயம், பன்னீர், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பிரெட்டின் இரண்டு பக்கங்களிலும் வெண்ணெய் தடவி, டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

ஒரு வாணலிலை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

அடுத்து குடைமிளகாய், பன்னீர் மற்றும் தக்காளி சேர்த்து, லேசாக 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு அதில் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, இறக்கி விட வேண்டும்.

பின்பு அந்த தக்காளி, பன்னீர் கலவையை, டோஸ்ட் செய்த ஒரு பிரட்டின் நடுவே வைத்து, மற்றொரு பிரட் துண்டை வைத்து மூடி பரிமாற வேண்டும்.

இப்போது சூப்பரான தக்காளி பன்னீர் சாண்ட்விச் ரெடி!!!

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News