லைஃப்ஸ்டைல்
உடற்பயிற்சி

ஆரோக்கியமான வாழ்வைப் பெற உடற்பயிற்சி அவசியம்

Published On 2021-07-12 02:29 GMT   |   Update On 2021-07-12 02:29 GMT
நாள்தோறும் காலை அல்லது மாலை நேரங்களில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா செய்வது உடலுக்கு மிகுந்த நன்மை கிடைக்கும். உடலை வருத்தி உடற்பயிற்சி செய்ய கூடாது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அத்தகைய நோயற்ற வாழ்வை பெற போதிய அளவு தூக்கம், சரிவிகித சமச்சீர் உணவு, வயதுக்கு ஏற்ற உடற்பயிற்சி ஆகியவை அவசியம். பொதுவாக தூக்கத்தை பொறுத்தவரை, பிறந்த குழந்தை 1 வருடம் வரையில் சுமார் 18 மணி நேரம் தூங்க வேண்டும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 16 மணி நேரமும், 12 வயது வரையுள்ள குழந்தைகள் 14 மணி நேரமும் தூங்குவது அவசியம். இதேபோல் 18 வயது வரையில் சுமார் 10 மணி நேர தூக்கம் தேவைப்படும். 18 வயதுக்கு மேல் சுமார் 8 மணி நேரத் தூக்கம் உடலுக்கு தேவைப்படும்.

தூங்கும்போது உடலில் வளர்சிதை மாற்றங்கள் ஏற்படுகிறது. உடல் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இத்தகைய செயலால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. உணவைப் பொறுத்தவரை நாள்தோறும் ஒவ்வொருவரும் சரிவிகித சமச்சீர் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்கு மாவுச்சத்து, நார்ச்சத்து உள்பட பல்வேறு சத்துக்கள் அவசிய தேவையாக உள்ளது. அதனால் நாள்தோறும் பால், முட்டை, பருப்பு, காய்கறி, கீரைகள், பழங்கள் இவற்றை உண்ண வேண்டும். அசைவ உணவுகளை குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.

அதே போன்று நாள்தோறும் காலை அல்லது மாலை நேரங்களில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா செய்வது உடலுக்கு மிகுந்த நன்மை கிடைக்கும். உடலை வருத்தி உடற்பயிற்சி செய்ய கூடாது. அவரவர் வயதிற்கேற்றவாறு உடற்பயிற்சி முறைகளை அமைத்துக் கொள்வது நல்லது. பொதுவாக குழந்தைகளுக்கு 14 வயது வரையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை பெற்றோர்கள் வழங்க வேண்டும். அத்தகைய வயதில் அவர்களின் உடலில் வளர்சிதை மாற்றங்கள் ஏற்படும். எனவே குழந்தைகளின் ஆரோக்கிய நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. அப்போதுதான் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும்.

குறிப்பாக ஆரோக்கியமான வாழ்வை பெறுவதற்கு மேற்கூறிய அனைத்து விதமான நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதுடன் புகை, மது போன்ற தீய பழக்கவழக்கங்கள் இல்லாமல் இருந்தால் ஆரோக்கியமான வாழ்வை பெறலாம்.
Tags:    

Similar News