செய்திகள்
பலி

கும்பகோணத்தில் சரக்கு ரெயில் மோதி 2 வாலிபர்கள் பலி

Published On 2020-10-15 10:34 GMT   |   Update On 2020-10-15 10:34 GMT
கும்பகோணத்தில் சரக்கு ரெயில் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உல்லிக்கான் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் விஜய்(வயது 25). இவர் அந்த பகுதியில் உள்ள கோழிக்கறி விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தார். செட்டிமண்டபம் அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த முருகேசன் மகன் சந்தோஷ்(20). இவர், கொத்தனார் வேலை செய்து வந்தார்.

நண்பர்களான இருவரும் இரவு நேரத்தில் ரெயில்வே தண்டவாளத்தின் அருகில் நீண்ட நேரம் அமர்ந்து பேசுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு இருவரும் வழக்கம்போல் பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் தங்கள் வீட்டுக்கு செல்வதற்காக இருவரும் நேற்று அதிகாலை 2 மணியளவில் கும்பகோணம் பத்தடி பாலம் அருகே ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது மயிலாடுதுறையில் இருந்து ஓசூருக்கு நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் சென்றது. எதிர்பாராதவிதமாக வாலிபர்கள் மீது சரக்கு ரெயில் மோதியது.

ரெயில் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட சந்தோஷ் மற்றும் விஜய் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் ரெயில்வே புறக்காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரெயிலில் அடிபட்ட பலியானவர்களின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News