செய்திகள்
கமல் ஹாசன்

மகளிருக்கான இட ஒதுக்கீடு உயர்வு: கமல் ஹாசன் வரவேற்பு

Published On 2021-09-13 14:55 GMT   |   Update On 2021-09-13 14:55 GMT
அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதமாக இருந்து வருகிறது. தற்போது அது 40 சதவீதமாக உயர்த்தப்படும் என சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹசான் டுவிட்டரில் ‘‘அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதை ம.நீ.ம. வரவேற்கிறது. இந்த மாற்றம் தனியார் துறையிலும் நிகழவேண்டிய ஒன்று. சமத்துவத்தை நோக்கிய பாதையில் தளர்வின்றி பயணிப்போம்’’ எனத் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News