லைஃப்ஸ்டைல்
பக்கோடா மோர்குழம்பு

சூப்பரான பக்கோடா மோர் குழம்பு

Published On 2019-09-06 08:45 GMT   |   Update On 2019-09-06 08:45 GMT
பக்கோடா சேர்த்து கார குழம்பு செய்து இருப்பீங்க. இன்று பக்கோடா மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

பக்கோடாவிற்கு


கடலைமாவு - 6 டேபிள் ஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1,
மிளகாய் தூள், உப்பு - கால் டீஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு,

மோர் குழம்பிற்கு

கெட்டியான மோர் - 3 கப்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்,
தனியா - 2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 3,
வற்றல் மிளகாய் - 1,
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,

தாளிக்க

கடுகு, பெருங்காயம், மஞ்சள் பொடி, உப்பு - தேவையான அளவு



செய்முறை:

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடலைப்பருப்பு, தனியாவை ஊற வைத்து அதனுடன் பச்சைமிளகாய், தேங்காய்த் துருவல், மிளகாய் வற்றல் சேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.

மோரை நன்றாக கடைந்து அதனுடன் அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கரைத்து வைக்கவும்.

கடலைமாவில் நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகாய் தூள் சேர்த்துக் கலந்து நீர் விட்டு தளரப் பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயைக் காய வைத்து கலந்த மாவை பக்கோடாக்களாக உருட்டிப் போட்டு பொன்நிறமாகப் பொரித்தெடுக்கவும்.

மோர்க் கலவையை குழம்பு வைக்கும் பாத்திரத்தில் கொட்டி அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பொரித்தெடுக்கும் போதே பக்கோடாக்களைக் குழம்பில் சேர்த்து விடவும்.

பால் போல் நுரைத்து வரும்போது கிளறி தீயை குறைத்து 2 நிமிடம் வைத்திருந்து, கடுகு, பெருங்காயம், மஞ்சள் தூள் தாளித்து மூடி வைக்கவும்.

பக்கோடா மிருதுவாகி, குழம்பு தயாரானவுடன் இறக்கி சூடாக பறிமாறவும்.

சூப்பரான பக்கோடா மோர்குழம்பு ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News